• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஓ பட்டர் ஃபிளை- விமர்சனம்

by Tamil2daynews
March 6, 2026
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஓ பட்டர் ஃபிளை- விமர்சனம்

முக்கோணக்காதல் கதைகள் சினிமாவில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கணவனுடன் நிம்மதி தேடி  வந்த இடத்தில் நாயகியின் முன்னாள் காதலனும் அங்கே வந்து சேர்ந்தால் என்ன ஆகும்..?

இப்படியும் சில படங்கள் வந்திருந்தாலும் அதில் விட்டுக் கொடுத்தல் இருந்திருக்கிறது. ஆனால், அந்த இரு ஆண்களும் சுய நலத்துடன் செயல்பட ஆரம்பித்தால், இருவரின் இடையில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்ணின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக சொல்லியிருப்பது இந்தப் படத்தை வித்தியாசப் படுத்தியிருக்கிறது.

அதிலும் கிளைமாக்சில் என்ன நடந்தது என்பதை முதலிலேயே சொல்லிவிட்டுப் படத்துக்குள் போவதற்கு கண்டிப்பாக ஒரு தைரியம் வேண்டும்.

அந்தத் தைரியம் இயக்குனர் விஜய் ரங்கநாதனுக்கு இருக்கிறது. மட்டுமல்லாமல் அதை நம்.வழக்கமான திரைக்கதை அமைப்பில் சொல்லாமல் நான் லீனியராக சொல்லிக் கொண்டு போதிலும் வித்தியாசப் பட்டிருக்கிறார் அவர்.
Oh Butterfly' movie review: An intriguing and affecting rumination on guilt - The Hindu

நாயகி நிவேதிதா சதீஷை சுற்றித்தான் கதை நகர்கிறது. இருதலைக்கொள்ளி எறும்புக்கு உதாரணமாக சிக்கிக் கொண்டு கணவனுக்கு முன்னாலேயே காதலனையும் வைத்துக்கொண்டு படும் பாட்டை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

Harm OCD என்ற மருத்துவ நிலைப்பாட்டை புரிந்து கொண்டு அதில் சரியாகப் பொருந்தி இருக்கிறார் நிவேதிதா.

அவரது கணவராக வரும் அத்துலின் நடிப்பையும் சொல்லியாக வேண்டும். சொல்லப்போனால் வேலை இல்லாத விரக்தி, திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆனாலும் மனைவி மீது கை படாத அவலம், கடைசியில் நண்பனும், மனைவியும் சேர்ந்து செய்த துரோகம் என்று எதிர்கொள்ளும் எல்லா நிலைகளிலும் சிக்கித் தவிக்கும் தவிப்பை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

தோற்றத்தில் ஹீரோ மெட்டீரியலாக இருக்கும் சிபி சந்திரன் படத்தின் வில்லன் என்பது இனிய முரண். ஆனாலும் அந்தப் பாத்திரத்தில் அளவுகோல் மிகாமல் நடித்திருக்கிறார்.

வீட்டுப் பணியாளராக வரும் பெரியவர் நாசரின் உயிர்கள் மீதான கவலையும், பட்டுப் பூச்சிக்கு கூட பெயரிட்டு அழைக்கும பாங்கும் வித்தியாசம்

அவரால் உணரப்படும் அந்த ‘மரண வாசனை ‘ புல்லரிக்க வைக்கிறது.
Oh Butterfly' movie review: An intriguing and affecting rumination on guilt - The Hindu

அதேபோல்தான் கைரேகை பாட்டி கீதா கைலாசத்தின் பாத்திரமும். ஆனால், அந்தப்பாத்திரத்தின் முடிவில் சினிமாத்தனம் தூக்கலாக இருக்கிறது.

கடைசியில் சிபி சந்திரனின் முடிவும் கூட சினிமா க்ளிஷே…

ஒரு மலை வாசஸ்தலத்தை எப்படிப் படமாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது வேதராமன் சங்கரனின் ஒளிப்பதிவு.

வைசாக் சோமநாதனின் இசையும் திரைக்கதையின் வித்தியாசத்தை உணர வைத்திருக்கிறது.

ஒரு சைக்கலாஜிகல் திரில்லரை எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாண்டு வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ரங்கநாதன்.

ஆனால், இந்தப் பாணியில்.அமைந்த படைப்புகள் வெகுஜன அரங்கில் எப்படி வரவேற்புப் பெறும் என்பதும் கூட சஸ்பென்ஸ்தான்.

மொத்தத்தில் படம் வித்தியாசம் என்கிற பெயரில் சற்று மனக்குழப்பத்தில் எடுத்திருக்கிறார் இயக்குனர்.
Previous Post

நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிலிக்ஸ்!

Next Post

அனோமி – விமர்சனம்

Next Post

அனோமி - விமர்சனம்

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.