• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

by Tamil2daynews
February 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார்  கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

 

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு-  சக்தி வாய்ந்த பல விநியோகஸ்தர்களுடனான உத்தி மூலம் செயல்படுத்தப்படும்.

அந்த வகையில் சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு பகுதியை டிரைடண்ட் ரவி தலைமையிலான ஒயிட் நைட்ஸ் விநியோகிக்கும். கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார். அதனைத் தொடர்ந்து மதுரை- ராமநாதபுரம்- திருச்சி- தஞ்சாவூர் -சேலம் ஆகிய முக்கிய பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார். இது போன்று கட்டமைக்கப்பட்ட பிராந்திய விநியோக முறை- மாநிலம் முழுவதும் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிஃபிளக்ஸ் ஸ்கிரீன்ஸ் ஆகிய இரண்டிலும் வலுவான திரையிடலை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு குறித்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு விநியோகஸ்தர்கள்,

” டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’  ( Toxic: A Fairy Tale for Grown Ups) சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய அளவிலான படங்களில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில் ஏற்கனவே யாஷ் மீது இருக்கும் அன்பும் , ஆதரவும் சிறப்பானது. இங்குள்ள பார்வையாளர்கள் யாஷை ஏற்றுக்கொண்ட விதம் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. இந்த அளவிலான லட்சியம் கொண்ட ஒரு படத்திற்கான விநியோகத்தில் நாங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களுக்கு ஒரு பெரிய வெளியீடு மட்டுமல்ல.. இன்று இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றுடன் இணைந்திருப்பதும் உற்சாகமான ஒன்றாகும் ” என்றனர்.

‘கே ஜி எஃப் :பார்ட் 2 ‘ படத்தின் அற்புதமான வெற்றி மற்றும் தமிழ்நாட்டில் யாஷ் மீதான பரவலான புகழ் மற்றும் வரவேற்பு ஆகியவையே இந்த ஒப்பந்தத்தின் அளவிற்கான காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ் பார்வையாளர்கள் யாஷ் மீது மிகுந்த அன்பைப் பொழிந்து.. அவரது திரை ஆதிக்கத்தையும், தனித்துவமான புகழையும் கொண்டாடி, அவரை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எல்லையைத் தாண்டிய அரிய பிணைப்பு. அதனால் இந்த ஒப்பந்தம் வலுவான நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

63 கோடி ரூபாய் முன் பண ஒப்பந்தம் மற்றும் வலுவான பிராந்திய நெட்வொர்க்குடன் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic :A Fairy Tale for Grown Ups) தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் மாநிலம்  முழுவதும் பிரம்மாண்டமான மற்றும் விரிவான வெளியீட்டிற்கும் தயாராக உள்ளது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘ டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grown Ups) திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே தருணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் இதன் டப்பிங் பதிப்புகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. கே வி என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations) தயாரித்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி , ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.‌

Previous Post

ஃபோர்த் ப்ளோர் – விமர்சனம்

Next Post

‘ஆழி’ – விமர்சனம்

Next Post

'ஆழி' - விமர்சனம்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.