ஃபோர்த் ப்ளோர் – விமர்சனம்

ஃபோர்த் ப்ளோர் – விமர்சனம் 

ஆரி அர்ஜுனன் நடித்துள்ள ‘ஃபோர்த் ப்ளோர்’ (Fourth Floor) ஒரு விறுவிறுப்பான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாகும். அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் தற்கொலை மற்றும் அதைச் சுற்றியுள்ள மர்மங்களை மையமாகக் கொண்டு, பல திருப்பங்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கியுள்ள இந்தப் படம், கனவுக்கும் உண்மைக்கும் இடையிலான உறவை ஆராய்கிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முழுமையாக சில அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் ஒரு சில உண்மை சம்பவங்களை படமாக்கப்பட்டுள்ள இப்படம், கனவு மற்றும் யதார்த்தத்திற்கு இடையிலான தொடர்பை ஆராயும் ஒரு உளவியல் த்ரில்லர் என்று கூறப்படுகிறது.

தான் காதலிக்கும் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை தனது ஐடி நிறுவன வேலையால் பாம்பேவில் இருந்து சென்னைக்கு வரும் நடிகர் ஆரி தன் காதலிக்கு நேர்ந்தது என்ன என்பதை திகிலுடன் கூடிய திருப்புங்களுடன் அடங்கிய படம்.
Aari Arujunan's horror film Fourth Floor gets a release date

பணத்தின் முதல் கதாநாயகன் என்று கூறினால் இசையமைப்பாளரை சொல்லலாம் அந்த அளவுக்கு பின்னணி இசை அபாரம்.

படத்தில் அந்த கடிகாரம் ஒரு கதை பாத்திரம் அபித்திருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது.

ஹீரோயின் முதல் படம் என்று சொல்லும் அளவிற்கு அவர் நடிப்பு சூப்பர்.

ஐடி பெண் குளிராக நடித்திருக்கும் தீப்ஸிகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தில் யூத்பராக வரும் கூட்டம் தேவையில்லாதது.

ஆரியர்சுனா நண்பர்களாக வருவதில் ஆதித்யா கதிர் காமெடியில்  தனி முத்திரை பதிக்கிறார்.

ஒரு சில லாஜிக் பிரச்சனைகள் இருந்தாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்வாதாரத்தை கூறிய விதம் திரைக்கதையில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.

ஆரி அர்ஜுனன் நாயகனாகவும், தீப்ஷிகா நாயகியாகவும் நடிக்க, பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனைவருமே தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் இரண்டாம் பாதியில் தன் காதலிக்கு அரசியல்வாதியால் நேர்ந்த கொடுமையை நினைத்து தவிக்கும் ஆரியின் நடிப்பு அபாரம்.

மொத்தத்தில் இந்த போர்த் ப்ளோர் திகிலின் உச்சம்.
Next Post

Recent News

error: Content is protected !!