திரைப்படத் துறையில் புகழ்பெற்ற பல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, அவை முதன்மையாக நல்ல உள்ளடக்கத்தின் மீது தான் நம்பிக்கை வைக்கின்றன. அவர்கள் எப்போதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களால் பாராட்டப்படும், சிறந்த உள்ளடக்கம் கொண்ட தரமான படைப்புகளை உருவாக்கவே விரும்புகிறார்கள். உண்மையில், அவர்கள் திரைக்கதை மற்றும் குணாதிசயங்களின் அடிப்படையில், கலைஞர்களை இறுதி செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அவர்களை கதையின் சார்பில் இயங்கும் ஹீரோக்களாக பார்க்கவே விரும்புகிறார்கள். இந்த வகையில் Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், ஒரு தூய முன்னுதாரணமாக நிற்கிறார். உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் படைப்புகளை தருவதால், ஒட்டுமொத்த வர்த்தக வட்டத்திலும் அவருக்கும் பெரும் பாரட்டுக்கள் கிடைத்து வருகிறது. இந்த வரிசையில் இயக்குநர் கவின் எழுதி இயக்கிய முகன்-சூரி-மீனாட்சி நடித்துள்ள “வேலன்” திரைப்படம் இன்று (டிசம்பர் 31, 2021) தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது.., “திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களுக்கு ரசிக்கத்தக்க அனுபவத்தை அளிக்கும் திரைப்படங்கள் குறித்து, நான் எப்போதும் பிரமிப்புடன் கவனித்து வருகிறேன். உண்மையில், திரைப்படத் தயாரிப்பு பள்ளியில் குடும்ப படங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட பாடம் உள்ளது, அது பல வகைகளில் ‘பார்வையாளர்களின் உளவியல்’ பற்றி விவாதிக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஒரு குடும்பம் திரையரங்கிற்குச் சென்று திரைப்படத்தைப் பார்க்கும் போது, அவர்கள் முதலீடு செய்த நேரம், பணம் ஆகிவற்றிற்கு ஏற்ற வகையில் முழு திருப்தியுடன் வெளியேறுவதைப் பார்க்கும்போது தான், நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அந்த வகையில் பார்வையாளர்களுக்கு சிறப்பானதொரு அனுபவத்தை வழங்கும் படமாக “வேலன்” இருக்கும். கவின் ஒரு அழகான திரைப்படத்தை அட்டகாசமாக வடிவமைத்து உருவாக்கியுள்ளார், இப்படத்தின் நடிகர்கள் அதற்கு உயிர் சேர்த்துள்ளனர். முகேன் ஒரு அற்புதமான கலைஞர், கடின உழைப்பு, நேர்மை, தயாரிப்பாளருடனான நட்பு மற்றும் ஒழுக்கம் மிகுந்த நடிகர்களை தமிழ் சினிமா ஏற்றுகொள்ள தவறியே இல்லை, இந்த குணங்கள் முகேனை ஒரு புகழ்பெற்ற ஐகானாக மாற்றும், அவர் திரைத்துறையில் பெரிய இடத்தை அடைவார். இந்த படத்திற்கு சூரி மிகப்பெரும் தூண், திரைப்படத்தில் அவர் முகேனுக்கு சமமாக இருப்பார். மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை, மேலும் அவர் படப்பிடிப்பு முழுவதும் செட்டுக்கு ஒரு நொடி கூட தாமதமாக வந்ததில்லை. பிரபு சார் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தை வரவேற்று, நல்ல எண்ணிக்கையில் திரையரங்குகளில், திரையிடப்படுவதை உறுதி செய்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ள வேலன் திரைப்படத்தை Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.