தெய்வ மச்சான் – விமர்சனம்
படத்தின் இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் ஒரு கல்யாணத்தை கதையாக எடுத்து அதில் நிச்சயம் முதல் மறுவீடு வரை என அனைத்தையும் திரைக்கதையாக எழுதி அதில் நடக்கும் விஷயங்களை திகட்டாமல் மிகவும் இயல்பாக சொல்லி இருக்கிறார்.
விமலின் கனவில் வரும் சில விஷயங்கள் நிகழ் காலத்தில் அப்படியே நடக்கிறது. இதனால் ஒரு பக்கம் கதி கலங்கி போய் இருக்கும் இவரின் தங்கையான அனிதா சம்பத்திற்கு வேறு அடுத்தடுத்து கல்யாணம் தடை பட்டு போகிறது.
இதனால் மனம் நொந்து குடும்பமே உட்கார்ந்து இருக்கும் நிலையில்தான் நல்ல சம்பந்தம் ஒன்று தேடி வருகிறது. ஆனால் விமலின் கனவில் தங்கச்சி புருஷன் மச்சான் இரண்டு நாட்களில் இறந்து விடுவார் பகீர் குண்டு வந்து விழுகிறது. இறுதியாக விமலின் மச்சான் என்ன ஆனார்,அவரை காப்பாற்றும் விமலின் முயற்சி என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்க பதில்களை பதில்களே படத்தின் கதை!
விலங்கு திரைப்படத்திற்கு பிறகு நல்ல ஒரு ஜாலியான ஒரு திரைப்படமாக விமலுக்கு வந்து இருக்கிறது தெய்வ மச்சான். விமலுக்கே உரித்தான சாமானிய கிராம இளைஞனாக கதாபாத்திரம். கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தி இருக்கிறார். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பால சரவணனின் காமெடிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன.
தங்கையாக அனிதா சம்பந்த கதாபாத்திரத்திற்கு நன்றாகவே நியாயம் செய்து இருக்கிறார். ஆடுகளம் நரேன் கதாபாத்திரம் பெரிதாக எடுபடவில்லை. வேல ராம மூர்த்திக்கு ஒரே காட்சிதான். ஆனால் அவரின் தாக்கம் படம் முழுக்க விரவிக் கிடந்தது. விஜய் டிவி தீபா அக்காவின் காமெடிகள் சிரிப்பு சரவெடி
படத்தின் இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் ஒரு கல்யாணத்தை கதையாக எடுத்து அதில் நிச்சயம் முதல் மறுவீடு வரை என அனைத்தையும் திரைக்கதையாக எழுதி அதில் நடக்கும் விஷயங்களை திகட்டாமல் மிகவும் இயல்பாக சொல்லி இருக்கிறார். அனைத்து அந்த மண்ணுக்கே உரித்தான கலாச்சாரத்தோடு காட்சிகளாக வந்து இருக்கின்றன. முதல் பாதியின்,பாதிக்கு மேல் சில இடங்கள் தோய்வை ஏற்படுத்தினாலும் அதை இரண்டாம் பாதி சரிகட்டி விடுகிறது.
கேமில் ஜே அலெக்ஸின் கேமரா திண்டுக்கல்லை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறது. காட்வினின் பின்னணி இசை கதைக்கு ஒன்றி இருந்தாலும், பாடல்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தில் ஆங்காங்கே டப்பிங் பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்தையும் மறக்கடித்து படம் நம்மை சிரிக்க வைக்கிறது தெய்வ மச்சான்.