• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

லெஜெண்ட் சரவணனின் புதிய படத்தின் பெயர் ‘லீடர்’

by Tamil2daynews
February 4, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

லெஜெண்ட் சரவணனின் புதிய படத்தின் பெயர் ‘லீடர்’

 

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘லீடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள R.S. துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் கதை குறித்து விவரித்த படக்குழுவினர், “நிழல் உலகத்திற்கும் காவல் துறைக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அதன் தீவிரத்தில் இருந்து அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் எவ்வாறு காப்பாற்றிக் கொண்டு தப்பிக்கிறான் என்பதே லீடர்,” என்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று சென்னையில் நிறைவுற்றது. மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் இப்படம் இருக்கும்.
Image‘லீடர்’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரம் இயல், ஜெயஸ்மிர்தா, பத்மன், யோகிராம், ஓ ஏ கே சுந்தர், மகாநதி ஷங்கர், மரியம் ஜார்ஜ், “ஆதித்யா” கதிர், வேல் அருணாச்சலம், நிரஞ்சன், ஷோபன் பாபு, அசோக் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார். S. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். சண்டை பயிற்சி: மகேஷ் மேத்யூ; கலை இயக்கம்: G. துரைராஜ்; உடைகள் வடிவமைப்பு: தீப்தி RJ, பூர்த்தி பிரவின்; உடைகள்: பி. ரங்கசாமி; ஒப்பனை: என். சக்திவேல், அப்துல், ஹர்ஷா கார்த்திக், மூவேந்தர், ரஞ்சித்; சிகை அலங்காரம்: ஜெ. தனசேகரன், அசால்ட் கணேஷ், ஷர்மிளா, ஷிவராஜ்; டப்பிங்: Knack, ஜி. கோதாண்டன், ஜி. விஷ்ணுவர்தன்; வி எஃப் எக்ஸ்: ஃபேந்தம் எஃப் எக்ஸ்; அனிமேஷன்: அம்பானி என் எஸ் கே; டி ஐ: எல் வி பிரசாத் ஸ்டூடியோஸ்; கலரிஸ்ட்: ரங்கா; மிக்சிங்: டி. உதய்க்குமார்; எஸ் எஃப் எக்ஸ்: ஏ. சதீஷ் குமார்; பாடல்கள்: கபிலன், விவேகா; நடனம்: சங்க‌ரையா டி; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் லெஜெண்ட் சரவணனின் நடிப்பில் R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட‌ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

Previous Post

மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும் ‘வாரணாசி’ ( VARANASI )திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

Next Post

வித் லவ் – விமர்சனம்

Next Post

வித் லவ் - விமர்சனம்

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.