• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘லாக்கர்’ – விமர்சனம்

by Tamil2daynews
November 23, 2023
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘லாக்கர்’ – விமர்சனம்

 

இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் ‘லாக்கர்’ படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

வித்தியாசமான முறையில் பணத்தைக் கொள்ளையடிக்கிற நாயகனும் அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுமாய் விறுசவிறுப்பான கதைக்களத்தில் பயணிக்கும் படமே  ‘லாக்கர்.’

சொகுசாய் வாழ்வதற்கு ஆசைப்படும் ஹீரோ பலரிடமிருந்தும் நூதன முறையில் பணத்தைக் கொள்ளையடிக்கிறான். அவன் வாழ்வில் திடுதிப்பென நுழைந்த அந்த பெண் கொஞ்ச நாளிலேயே காதலியாகிறாள். ஒரு கட்டத்தில் அவள், அவன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை தெரிந்துகொள்கிறாள். அவனை வெறுக்கிறாள். அதனால் அவன் இனி யாரையும் ஏமாற்றக்கூடாது என்ற முடிவுக்கு வருகிறான்.

சில நாட்களிலேயே நிலைமை தலை கீழாகிறது. ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை வெறுத்த அதே காதலி, அதே வழியில் ஏமாற்றி பணம் சம்பாதிக்க அவனைத் தூண்டுகிறாள். பணம் பறிக்க ஒருவரை குறிவைத்து அதற்காக ஸ்கெட்ச் போட்டும் தருகிறாள்.
Locker Movie (Nov 2023) - Trailer, Star Cast, Release Date | Ticketnew.com

அவளது மன மாற்றத்துக்கு காரணம் என்ன? அவள் யாரை ஏமாற்ற திட்டமிடுகிறாள்? அதற்கான பின்னணி என்ன? திட்டமிட்டதை செயல்படுத்தும்போது அவர்கள் சந்திக்கும் விளைவுகள் என்னென்ன? இப்படியான கேள்விகளுக்கு பதில் தரும் விதத்தில் திரைக்கதையமைத்து படத்தை இயக்கியிருக்கிறார்கள் என்.ராஜசேகரும், யுவராஜ் கண்ணனும்.

நாயகனாக விக்னேஷ் சண்முகம். ஷேர் மார்க்கெட் முதலீடு அது இதுவென தனது ஸ்மார்ட்டான அறிவைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடிப்பது, அதை வைத்து குடி போதையில் மிதப்பது, காதலுக்காக தன் பாதையிலிருந்து மாறுவது, தான் நம்பியவரின் துரோகத்துக்கு ஆளாவது என தான் ஏற்ற கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

நாயகி நிரஞ்சனா அசோகன் சினிமாவுக்கு புதுவரவு. நடிப்பில் அது தெரியாதபடி இயல்பாக நடித்திருப்பது படத்துக்கு பிளஸ். தங்கக் கட்டிகளை கொள்ளையடிக்க பரபரப்பாக காய் நகர்த்தும் காட்சிகளில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் துடிப்பான நடிப்பு ஈர்க்கிறது.

வில்லனாக வருகிற நிவாஸ் ஆதித்தனின் வில்லத்தனம் மிகமிக எளிமை!

நாயகியின் அப்பா, நாயகனின் நண்பர்கள் என இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருப்போரின் பங்களிப்பில் குறையில்லை.
விறுவிறுப்பான ராபரி திரில்லராக உருவாகியுள்ள லாக்கர் | Tamil cinema locker movie update

அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் சீனிவாசன் இசையில் நாயகனின் மனநிலையை பிரதிபலிக்கும் ‘வா பறப்போம் நிலை பறப்போம்’ பாடல் ரசிக்க வைக்கிறது. மெல்லிய சோகம் இழையோடும் ‘யாரோ போல்’ பாடல் இதம்!

தணிகைதாசனின் ஒளிப்பதிவு நேர்த்தி!

கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடிக்கும் காட்சிகள் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம்.

நீங்கள் தேர்வு செய்த கதைக்கு இன்னும் சற்று பலமான திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருந்தால் படம் மிகப்பெரிய வசூல் குவித்திருக்கும் இந்த ‘லாக்கர்’.

இரட்டை இயக்குனர்கள் கவனத்திற்கு.

தனியான ஒரு இயக்குனர் சினிமாவில் ஜெயிக்கும் காலகட்டம் இது.ஆனால் நீங்கள் இருவர் இயக்கி இருப்பது பெருமை தான் இருந்தாலும் படத்தில் ஆங்காங்கே சிறு குறைகள் அதை சற்று கவனித்து இருந்தால் ‘லாக்கர்’ ஈசியாக திறந்திருக்கும்.
Previous Post

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!

Next Post

‘ஜோ’ – விமர்சனம்

Next Post

'ஜோ' - விமர்சனம்

Popular News

  • ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’

    0 shares
    Share 0 Tweet 0
  • மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராக்கிங் ஸ்டார் ‘ யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தபாஹி ‘ மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!

March 3, 2026

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார்.

March 3, 2026

சூர்யா நடிக்கும் #சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

March 3, 2026

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

March 3, 2026

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

March 3, 2026

இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

March 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.