“‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் ஆன்-லொகேஷன் படப்பிடிப்புகளைத் தவிர 86 செட்கள் உருவாக்கினோம்” இயக்குநர் நிகில் அத்வானி!
“பொதுவாக, எந்தவொரு படத்திற்கும் குறைந்தது 16 வாரங்கள் முன் தயாரிப்பு தேவைப்படும். ஆனால், ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்திற்கு எங்கள் குழுவுக்கு ஒரு வருட முன்தயாரிப்பு காலம் தேவைப்பட்டது. ராஷ்டிரபதி பவன் இல்லாமல் சுதந்திரத்தின் கதையை சொல்ல முடியாது. உண்மையான ராஷ்டிரபதி பவனில் படப்பிடிப்பிற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, அந்த இடத்தின் துல்லியத்தன்மையை திரையில் கொண்டு வர ஆன் லொகேஷன் படப்பிடிப்புகள் மட்டுமல்லாது கூடுதலாக 86 செட்களை உருவாக்கினோம். இந்தக் கதை அந்தக் காலகட்டத்தில் நடந்தது என்பதை நாங்கள் காட்டவும் பார்வையாளர்களை 1900 காலக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும் நடிகர்கள் மற்றும் செட் அலங்காரம் உள்ளிட்டவை கவனமாக பரிசீலிக்கப்பட்டது” என்கிறார் நிகில் அத்வானி.
இந்த தொடரில் ஜவஹர்லால் நேருவாக சித்தாந்த் குப்தா, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக சிராக் வோரா, சர்தார் வல்லபாய் படேலாக ராஜேந்திர சாவ்லா, முகமது அலி ஜின்னாவாக ஆரிப் ஜக்காரியா, பாத்திமா ஜின்னாவாக இரா துபே, சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மெண்டோன்சா, லியாகத் அலி கானாக ராஜேஷ் குமார், வி.பி.மேனனாக கே.சி.சங்கர், லூயிஸ் மவுண்ட்பேட்டன் பிரபுவாக லூக் மெக்கிப்னி, லேடி எட்வினா மவுண்ட்பேட்டனாக கோர்டெலியா புகேஜா, ஆர்ச்சிபால்ட் வேவலாக அலிஸ்டர் ஃபின்லே, கிளெமென்ட் அட்லியாக ஆண்ட்ரூ குல்லம், சிரில் ராட்க்ளிஃப் ஆக ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.