இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு பிராமணக் குடும்பத்துப் பெண் இந்தியாவின் சிறந்த சமையல் கலை நிபுணராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்காக அவர் எப்படிப்பட்ட தடைகளைக் கடந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.இதில், யாரடி நீ மோகினி படத்தில் பார்த்த நயன்தாராவை மீண்டும் பார்க்கலாம்.
படத்தில் ஜெய் நயன்தாராவின் சிறுவயது நண்பராக நடித்திருக்கிறார். நயன்தாராவுக்குச் சமையல் கலை நிபுணராக வேண்டும் என்பது இலட்சியம் என்றால், ஜெய்க்கு அவரை எப்படியாவது சமையல் கலை நிபுணராகப் பார்க்க வேண்டும் என்பது தான் இலட்சியம். ‘ராஜா ராணி’ படத்தில் அவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரியை நினைவுப்படுத்துவது போல் இருக்கும்.
நிஜ வாழ்வில் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தத்தெடுத்து வளர்க்கிறார்.பரவாயில்லை அது அவரது விருப்பம்.

புரட்சித் தமிழன் சத்யராஜ் கதாபாத்திரம் சொல்லவே தேவையில்லை அவருக்கு கொடுத்த வேலையை அளவுக்கு அதிகமாகவே செய்து இருக்கிறார்
காமெடிக்கு ரெடின் கிங்ஸ்லீ இவர் வரும் காட்சிகள் ஓகே.
பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்.

முதலில் இந்த மாதிரி ஒரு கதையை தேர்வு செய்த இயக்குனர் நஇலஏஷ் கிருஷ்ணணாவிற்க்கு வாழ்த்துக்கள்.
கொரோனா காலகட்டத்தில் இருந்து இந்த கதையை எழுதினேன் என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார் இத்தனை ஆண்டுகள் சிரம் எடுத்து எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதி இருந்தால் அனைவரையும் இந்த அன்னபூரணி கவர்ந்திருப்பாள்.