‘லக்கிமேன்’ விமர்சனம்
மண்டேலா படத்திற்கு பிறகு யோகி பாபு உருப்படியா நடித்து வந்த படம் லக்கிமேன்.
திங்க் மூவீஸ் மற்றும் எஸ் என் எஸ் மூவி புரடக்ஷன்ஸ் தயாரிக்க யோகி பாபி, வீரா, ரேச்சல் ரெபக்கா, அப்துல் லீ, ஆர் எஸ் சிவாஜி, அமீத் பார்கவ், சாத்விக், சுஹாசினி குமரன் நடிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கும் படம்.
சிறுவயது முதலே அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று தூற்றப்பட்டு, அப்படியே தானும் நம்பி வளர்ந்து, கல்யாணம் ஆகி மனைவி (ரேச்சல் ரெபக்கா) ஒரு மகன் ( சாத்விக்) என்றாகி ரியல் எஸ்டேட் புரோக்கராக சொற்ப வருமானத்தில் போராடி வரும் ஒரு நபருக்கு ( யோகி பாபு)…
போலீஸ் துறையில் சக அதிகாரிகளி ன் முறையற்ற செயலால் கோபத்தில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி ( வீரா) .
அவனோடு கல்யாண நோக்கில் பழகும் ஒரு பெண் (சுஹாசினி குமரன்)
லக்கி மேனின் காரை அந்த போலீஸ் அதிகாரி சாலையில் நிறுத்த, அவன் ரியல் எஸ்டேட்
ஓனரிடம் உதவி கேட்க , அவர் இந்த போலீஸ் அதிகாரிக்கு டார்ச்சர் கொடுக்கும் போலீஸ் அதிகாரியிடம் சொல்ல, அவர் சிபாரிசுக்கு வர , அதனால் இந்த போலீஸ் அதிகாரி எரிச்சல் ஆகிறார்.
சாதாரண மனிதன்தான் பெரிய ஆள் என்று லக்கி மேன் சொல்ல, நேரமையனவன்தான் பெரிய மனிதன் என்று போலீஸ் அதிகாரி சொல்ல , இருவருக்கும் ஈகோ போர் துவங்குகிறது .
போலீஸ் அதிகாரி லக்கி மேனை விரட்ட, அவன் அவரை மன்னிப்புக் கேட்க வைக்க, போலீஸ் அதிகாரி கொந்தளிக்க, லக்கி மேனின் கார் திருடு போகிறது.
ஒரு மேன் தன்னுடைய குடும்ப சூழலால் லக்கி மேன் ஆவது தான் யோகி பாபுவின் கதாபாத்திரம்.அதை மட்டும் வைத்துமே படத்தை இயக்காமல் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நிலம் வாங்கவந்தவர்,ஹவுஸ் ஓனர் என அனைத்து கதாபாத்திரமே படம் பார்க்கும் நமக்கும் நம்பிக்கை ஊட்டுபவர்களாகவே தெரிகின்றனர்.
யோகி பாபு முழு படத்தையும் தன் முதுகில் சுமந்து கொண்டு இருந்தாலும் படத்தில் அவர் நடந்து கொள்ளும் ஒரு சில விதங்கள் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஒட்டவில்லை.
யோகி பாபு மகன் கதாபாத்திரம்.யோகி பாபு விற்க்கு பிறந்த பிள்ளையை போல் இருக்கிறார் வீரா அவருக்கும் வாழ்த்துக்கள்.
படத்தில் இரண்டு போட்டிகள் அது யார் என்றால் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் இதில் வெற்றி பெற்றது இசையமைப்பாளரே.
எதிர்பாராதது திடீர் திடீரென நடந்தால் எப்படி இருக்கும் ஒரு குரல் அனுப்பவும் இந்த படம் பார்க்கும் பொழுது.
படத்தின் மிகப்பெரிய குறை ஒவ்வொரு காட்சியும் முடியும் என்று நினைக்க வைப்பது தான் நீண்டு கொண்டே செல்வதை சற்று டைரக்டர் யோசித்திருக்கலாம்.