முந்திரி காட்டு மாவீரனின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லிவிட்டு ஒரு சில விஷயங்களை மறைத்துவிட்டு வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்டு இருக்கும் படம் படையாண்ட மாவீரா.

காடுவெட்டி குரு பாத்திரத்தில் வா கவுதமன் நடித்திருப்பதுடன் படத்தையும் இயக்கி இருக்கிறார். என்னதான் காடுவெட்டி குரு கதையாக இருந்தாலும் ஒரு சில உண்மை சம்பவங்கள் மற்றபடி புனையப்பட்ட கதையாகவே இப்படம் உருவாகி இருக்கிறது.
ஏழை மக்களுக்கு எதிராக போலீசார் நடத்தும் அராஜகத்தை தட்டிக் கேட்பதும், சீரழிக்கப்படும் பெண்களுக்கான நியாயத்தை தட்டி கேட்க சரியான தண்டனை தருவதன் மூலமும் காட்சிகளில் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இது ஒரு சாதிய அடையாளங்ககளுடன் சொல்லப்பட்டிருந்தாலும் கதை என்னவோ பொதுவான ஒரு கதையாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட பரம்பரையும், ஒதுக்கப்பட்ட சமூகத்தினரும் ஒன்றாகவே சகோதர பாசத்துடன் பழகினார்கள் என்ற காட்சிகளை அமைத்து இரு பிரிவினருக்குமான அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்த்திருக்கிறார்.ஆனால் சினிமாவால் அந்த சர்ச்சைகள் முடிவுக்கு வருமா என்பதெல்லாம் சந்தேகம் தான்.

கவுதமனின் தந்தையாக சமுத்திரக்கனி, தாயாக சரண்யா நடித்துள்ளனர்.மேலும் இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, ரெடி கிங்ஸ் லீக்கு மிகவும் கனமான கதாபாத்திரம் .மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா ஆகியோரு ம் நடித்திருக்கிறார்கள்.
நிர்மல் சரவணராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் பளிச்சென ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
சாம் சி. எஸ். பின்னணி இசை ஓகே ரகம்.
இயக்குனர் கவுதமன் ஏதோ ஒரு கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே காட்சிகளில் வேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.குருவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு அரசியல் ரீதியாக நடந்த துரோகங்கள் என்று வெளி உலகில் பேசப்படும் எந்த எதிர்மறை கருத்துக்களைப் பற்றி வாய் திறக்கவில்லை.
முழுக்க முழுக்க பாமக கட்சியினரை திருப்திப்படுத்தும் விதமாகவே காட்சி அமைப்புகளை எடுத்திருக்கிறார் கௌதமன்.