நீண்ட வருட இடைவெளிக்கு பின் புரட்சி கலைஞர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து வெளிவந்திருக்கும் படம் படை தலைவன்.
வேலு (ஷண்முக பாண்டியன்) ஒரு காட்டில் வாழும் யானை பயிற்றுவிப்பவர் (மஹவுட்). அவர் யானையின் பெயர் மானியன். மானியனை குழந்தையைப் போலவே பராமரித்து வருகிறார். அவருக்கு யானைதான் நண்பன், குடும்பம், வாழ்நாள் துணை என்று வாழ்கிறார்.
ஒன்றும் தெரியாமல் தொடங்கும் இந்த மீட்பில் பயங்கரமான இடங்கள், விலங்குகள், வஞ்சகர்கள், பிரச்னைகள் என அவனை தொடர்ந்து கஷ்டப்படுத்துகின்றது. ஆனால் அவன் உறுதியுடன் முன்னேறுகிறான். இதற்கிடையில் விஜயகாந்த் ஒருகாட்சியில் தோன்றி அவருக்கு உதவுகிறார்.
பின்னர் மானியனை எப்படி கண்டுப்பிடிக்கிறார் என்பதுதான் மொத்த கதை. ஹீரோ சண்முக பாண்டியனை பார்க்கும் போது விஜயகாந்தின் இன்னொரு வெர்ஷன் போலவே இருக்கிறார். நடை, அவர் பார்வை மட்டுமல்லாமல் சண்டை காட்சிகளை பார்க்கும் போது கேப்டனாகவே கண்ணுக்கு தெரிகிறார்.
மேலும் படத்தில் விலங்குகள் தான் முக்கியம் என்பதால் மற்ற நடிகர்கள் என்பதே குறைவுதான். அந்த வகையில் யுகி சேது, யாமினி சந்தர் உள்ளிட்டோர் கதையில் வந்து செல்கின்றனர். எஸ்.ஆர். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாகி இருக்கிறது. அவர் கேமரா பல இடங்களில் பூந்து விளையாடுகிறது.
பின்னணி இசையில் எந்த குறையுமே இல்லை. அடுத்து ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்த் ஒரு காட்சியில் தோன்றி இருக்கிறார். ஆனால் கோட் படம் போல இல்லாமல் அவரின் கண் கூட ஒரிஜினல் போல தத்ரூபமாக கிராபிக்ஸ் செய்து அப்ளாஸ் வாங்கி இருக்கின்றனர்.