ஜுப்ரா – விமர்சனம்
ஜீப்ரா திரைப்படம். தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் இந்த ஜீப்ரா திரைப்படம் பெரிய ஹீரோ வில்லன்கள் நடிகர்களை தாண்டி கன்டன்ட்டை மட்டுமே நம்பி கோதாவில் குதித்து இருக்கிறது. அப்படி குதித்திருக்கும் இத்திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை பார்ப்போம்….!
இதுவரை மக்களுக்கு பரிச்சயம் இல்லாத ஒரு கதை. குறிப்பாக வங்கிகளில் பண பரிமாற்றம் குறித்த செயல்பாடுகள் எப்படி இருக்கும், அதை செய்யும் கணக்கர்களின் வேலை என்ன, மேலாளர்கள் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும், வங்கிகளின் அட்மினிஸ்ட்ரேஷன் விஷயங்கள் என்ன, அது எப்படி இயங்குகிறது போன்ற விஷயங்களை மிகத் துல்லியமாக ஆராய்ந்து அதை சரியான முறையில் பயன்படுத்தி அதற்கு ஏற்றார் போல் கதையும் திரைகதையும் ஆழமாக அமைத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். சினிமாவுக்கு வருவதற்கு முன் வங்கியில் பணி புரிந்திருக்கும் இவர் வங்கி எப்படி இயங்கும் என்று நன்றாக அறிந்து வைத்திருப்பதால் அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு மிக மிகப் பிரமாதமாக அதை திரைக்கதைக்குள் உட்பகுத்தி சிறப்பான ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார். மகளிர் மட்டும், வி ஒன் மர்டர் கேஸ் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து பின் குயின் படம் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்த ஈஸ்வர் கார்த்திக் போதுமான அளவு தனக்கு வரவேற்பு கிடைக்காததை அடுத்து அதை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற முனைப்போடு இப்படத்தை கொடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
படத்தில் நாயகன் சத்யதேவ் ஒரு மிகப்பெரிய புத்திசாலியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பாக கொடுத்து சட்டுல் ஆன நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். படத்திற்கு வில்லன் என்று சொல்வதை விட இன்னொரு நாயகன் என்று சொல்லலாம் அந்த அளவு நாயகனுக்கு மிக ஈகுவல் என்பதை தாண்டி கிட்டத்தட்ட நாயகனாகவே இந்த படத்திற்கு மாறி இருக்கிறார் கன்னட நடிகர் தாலி தனஞ்செயா. இவரின் வெறித்தனமான தெறிக்கவிடும் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவருக்கும் சத்தியதேவுக்கும் ஆன கேட் அன் மவுஸ் கேம் மிகச் சிறப்பாக அமைந்து படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. வழக்கமான நாயகியாக அறிமுகமாகி போக போக கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் மாறி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து முக்கியமான கதாநாயகியாக திகழ்ந்திருக்கிறார்.
காமெடிக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்திருக்கிறார் நடிகர் சத்யா அக்காலா. இவர் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் கைதட்டல்களாலும் விசில்களாலும் அதிர்கிறது. சின்ன சின்ன விஷயத்தை கூட மிக சிறப்பாக செய்து காமெடிக்கு நான் தான் கேரண்டி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். சின்ன கதாபாத்திரம் மாதிரி வந்தாலும் கடைசியில் வந்து பட்டையை கிளப்புகிறார் நடிகர் சத்யராஜ். வழக்கம் போல் இவரது எதார்த்தமான நடிப்பு மிக கனகச்சிதமாக அமைந்து படத்தையும் தூக்கி நிறுத்த உதவி இருக்கிறது. மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சுனில் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் மிகச் சிறப்பாக கொடுத்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவரது காமெடி கலந்த எரிச்சல் ஊட்டும் வில்லன் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முத்தாய்ப்பாக இவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. மற்றபடி உடனடித்து அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை மிக சிறப்பாக செய்து படத்தையும் தாங்கி பிடித்து இருக்கின்றனர்.
தெலுங்கு தவிர்த்து மற்ற மொழிகளில் பெரிதாக புரமோஷன் இல்லை, பெரிய பில்டப் பேட்டிகள் இல்லை, தேவையில்லாத பப்ளிக் ஸ்டண்டுகள் எதுவுமே இல்லையென்றாலும் கதையையும் கன்டன்ட்டையும் மட்டுமே நம்பி பன்மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் பெரிய நடிகர்கள் பெரிய செட்டப்புகள் இருந்தால் மட்டும் போதாது கதையும் திரைக்கதையும் தான் முக்கியம் என்பதை மற்றொரு முறை நிரூபித்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு படம் எந்த பில்டப்புகளும் இன்றி கதையும் கண்டெண்டும் மிகவும் ஸ்ட்ராங்காக அமைந்து சிறப்பாக அமையும் பட்சத்தில் எந்தவித அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத விமர்சகர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை இந்த திரைப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
அதே சமயம் திட்டமிட்டு பரப்பப்படும் போலி விமர்சனங்களை ஒருபுறம் கண்டிப்பது முக்கியம் என்றாலும் கதையும் கண்டன்டும் மிக மிக சிறப்பாக அமையும் பட்சத்தில் அவையெல்லாம் அந்த திரைப்படத்தை ஒன்றுமே செய்ய முடியாது என்பதை இத்திரைப்படம் நிரூபித்து இருக்கிறது. முதல் ஏழு நாட்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்ற தேவையில்லாத விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டு கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்தாலே தேவை இல்லாத மற்ற விஷயங்கள் எதுவும் அந்தப் படத்தை தொந்தரவு செய்யாது என்பதை தியேட்டர் ஓனர்கள் இத்திரைப்படம் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் விமர்சகர்கள் மட்டுமா படம் சரியில்லை என்று சொல்கிறார்கள்? மக்களும் தானே!
இதே போல் இந்த மாதிரியான தரமான கன்டென்ட் இருக்கும் படங்களை போதுமான திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்து அவர்கள் லாபம் பார்த்துக் கொள்ளலாம். (இத்திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபகரமான விஷயங்கள் கையில் வந்து சேரும்.