’RAPO 22’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்!
தமிழ் சினிமாவில் பல மெலோடி ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் ஆகியோர் தெலுங்கு திரையுலகில் நடிகர் ராம் பொதினேனியின் 22வது படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தெலுங்கு சினிமாவிலும் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள்.
இந்த அனுபவம் குறித்து விவேக் மற்றும் மெர்வின் பகிர்ந்து கொண்டதாவது, ”உயர்தரமான இசை மற்றும் புதுமையான கதை சொல்லலுக்கு தெலுங்கு சினிமா பெயர் பெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராம் பொதினேனியின் 22ஆவது படமான ‘RAPO 22’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நாங்கள் அறிமுகமாவது எங்களுக்கு பெருமையான விஷயம். இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல். நிச்சயம் எனர்ஜிடிக்கான இசையைக் கொடுப்போம்” என்றனர்.