• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் காளிதாஸ் ஜெயராம் புத்தாண்டு தீர்மானமாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்!

by Tamil2daynews
January 4, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் காளிதாஸ் ஜெயராம் புத்தாண்டு தீர்மானமாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்!

 

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளார் என்பது அவர் தேர்ந்தெடுத்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திரம் மூலமும் தெளிவாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்காமல் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த புத்தாண்டில் இருந்து இன்னும் அதிகளவில் கதாநாயகனாகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாக காளிதாஸ் ஜெயராம் உறுதியளித்துள்ளார்.

இதுபற்றி நடிகர் காளிதாஸ் ஜெயராம் கூறும்போது, ”ஒரு நடிகருக்கு சிறந்த வழிகாட்டியாக இயக்குநர்கள் இருப்பார்கள் என்பதை நான் எப்போதும் உறுதியாக நம்புபவன். தற்போது இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள், அவர்களுக்கு முந்தைய தலைமுறை நடிகர்களும் இந்த விஷயத்தை உறுதியாக கடைப்பிடித்துள்ளனர். அவர்களின் வழியில் நானும் பயணப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சின்ன கதாபாத்திரமோ பெரிய கதாபாத்திரமோ என்னுடைய நடிப்புத் திறமையை மேம்படுத்தும் வகையிலான, கதாபாத்திரங்கள் கொடுத்த திறமையான இயக்குநர்களுடன் இதுவரை பணிபுரிந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் நான் நடித்திருப்பேன். ஆனால், அவை  விலைமதிப்பற்ற அனுபவங்களை எனக்கு பரிசளித்தன. எந்தவொரு நடிகரையும் போலவே, நானும் என்னுடைய அடுத்தக் கட்டம் நோக்கி நகர உள்ளேன்.

என்னுடைய நடிப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான முழு நீள கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க உள்ளேன். இனிமேல், தீவிர முயற்சிகள் தேவைப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை மகிழ்விக்கும் படியான படங்களில் நடிக்க உள்ளேன்.  இந்த புதிய முடிவின் முதல் படியாக, பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கும் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அந்தத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். இதை நான் உற்சாகமாக எதிர்பார்த்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
Previous Post

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !!

Next Post

பிரம்மாண்டமாக நடைபெற்ற கேப்டன் மில்லர் படத்தின் பிரீ ரிலீஸ் விழா…

Next Post

பிரம்மாண்டமாக நடைபெற்ற கேப்டன் மில்லர் படத்தின் பிரீ ரிலீஸ் விழா...

Popular News

  • மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

    0 shares
    Share 0 Tweet 0
  • நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டி குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-இன் “அய்யனா மானே” சீரிஸ், 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

May 6, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது!

May 6, 2026

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

May 6, 2026

கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’

May 6, 2026

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

May 6, 2026

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

May 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.