• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

2K லவ் ஸ்டோரி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
February 15, 2025
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
2K லவ் ஸ்டோரி – விமர்சனம்  ரேட்டிங் – 3.5  / 5

வெற்றிப்பட இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 2K லவ் ஸ்டோரி.

சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக் (ஜெகவீர்)  – மோனிகா (மீனாட்சி) பழகி வருகிறார்கள். பள்ளி பருவத்தில் துவங்கி கல்லூரி, அதற்குப்பின் தொழில் என அனைத்திலும் ஒன்றாக பயணிக்கும் இவர்களை பார்க்கும், அனைவரும் இவர்கள் காதலர்கள் என முடிவு செய்துவிடுகிறார்கள்.

ஆனால், இவர்கள் எப்போதுமே நண்பர்களாகவே பழக ஒரு கட்டத்தில் பவித்ரா என்கிற பெண்ணை கார்த்திக் காதலிக்க துவங்குகிறார். பவித்ராவை காதலித்தாலும், மோனிகாவுடன் தொடர்ந்து நட்பில் கார்த்திக் நெருங்கி பழகுவது பவித்ராவுக்கு பிடிக்கவில்லை.

இதனால், மோனிகாவுடனான நட்பை முறித்துக் கொள்ளும் படி கார்த்திக்கிடம் கூறுகிறார் பவித்ரா. ஆனால், கார்த்திக் மோனிகாவின் நட்பை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என கூறி, பவித்ராவுடனான காதலை பிரேக் அப் செய்கிறார். இதை அறிந்த மோனிகா, கார்த்திக் – பவித்ரா இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க, இந்த சமயத்தில் விபத்தில் சிக்கி மரணமடைகிறார் பவித்ரா.

தனது காதலியின் மரணத்தை தாங்காமல் வாடும் கார்த்திக்கை, துயரத்தில் இருந்து மீட்டெடுக்கிறார் மோனிகா. இதன்பின், கார்த்திக் – மோனிகா இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. இதன்பின் என்ன நடந்தது? இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? அல்லது இறுதிவரை நண்பரகளாகவே இருந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை.

இந்த காலத்து இளைஞர்களை கவரும் வகையில் அழகான திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சில இடங்களில் தொய்வு இருந்தாலும், அழகிய பயணத்தை பக்காவாக எடுத்துள்ளார்.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒன்றாக சேர்ந்து பழகி வந்தாலே அது காதல் தான், என முடிவு செய்து விடும் இந்த சமூகத்திற்கு, ஒரு ஆணும், பெண்ணும் இறுதிவரை நண்பரகளவே இருக்கலாம் என காட்டியுள்ளார்.

இதற்கிடையில் வரும் குழப்பங்கள், அதனால் எடுக்கப்படும் சில முடிவுகளையும், நண்பரகளவே இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் அழகாக காட்சி அமைத்துள்ளார். 90ஸ் கிட்ஸ் மனதை தொட்ட பிரியமான தொழி திரைப்படம் எப்படியோ, அதே போல் 2k கிட்ஸ் மனதை தொடுவது போல் அமைந்துள்ளது இந்த 2K லவ் ஸ்டோரி.

நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு பெரிதாக ஒன்றும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் மட்டும் தோன்றுகிறது.

மேலும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருந்தது. பாலசரவணன், சிங்கம்புலி நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சிங்கம்புலி கொடுக்கும் அலப்பறை அட்டகாசமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

டி. இமானின் பாடல்கள் பின்னணி இசை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். ஒளிப்பதிவு, எடிட்டிங் பக்கா.

முத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் கசமுசா செய்து வாழும் நபர்களுக்கிடையே இந்த 2k லவ் ஸ்டோரி தனித்து நிற்கும்.

2K லவ் ஸ்டோரி பெருமை.
Previous Post

ஒத்த ஓட்டு முத்தையா – விமர்சனம் ரேட்டிங் – 2.5 / 5

Next Post

காதல் என்பது பொதுவுடமை – விமர்சனம் ரேட்டிங் – 2.5 / 5

Next Post

காதல் என்பது பொதுவுடமை - விமர்சனம் ரேட்டிங் - 2.5 / 5

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.