சூர்யாவுக்கு பரிசாக ரோலக்ஸ் வாட்ச்சை கமல் அளித்தார். விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயர் ரோலக்ஸ்.
விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சூர்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று கமல் நன்றி தெரிவித்தார்.
படம் உலகெங்கும் மிகப்பெரிய வெற்றியை தழுவியது. அதுமட்டுமல்லாமல் படத்தில் நடித்த கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், மூவரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அதுமட்டுமல்லாமல் கிளைமாக்ஸ் காட்சியில் 2,3 நிமிடங்கள் வந்தாலும் நடிகர் சூர்யா வரும் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு அப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பக்கபலமாக அமைந்தது.
இதுபற்றி சூர்யா தரப்பு விசாரித்ததில் படத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது அன்பு கொண்டதற்காக நான் படத்தில் சம்பளம் ஏதும் வாங்காமல் நடித்தேன்.மேலும் இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தழுவியது எனக்கு மிகப்பெரிய சந்தோச மாக நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
