Rocks Nature Entertainment வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படம் மகரம்.
ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
நடிகர் அஜித் விக்னேஷ் பேசியதாவது..,இந்த நிகழ்ச்சியின் உண்மையான ஹீரோக்கள் நீங்கள் – பத்திரிகையாளர்கள் மற்றும் ரிப்போர்டர்கள் தான். பெரிய பெயர்கள் இல்லாமல், ஒரு புது டீமாக இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நீங்கள் எழுதிப் பொதுமக்களிடம் கொண்டு சென்றால் இந்த படத்தின் பெயரே பெரியதாகும். இயக்குநர் கதை சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்தது; கடல் காட்சிகள் சவாலாக இருந்தது. பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தாலும், இயற்கைக்கு முன் நாமெல்லாம் சிறியது என்பதே பெரிய பாடம். பல சிரமங்களை தாண்டி மிகவும் நேர்மையாக இந்த படத்தை முடித்துள்ளோம். இந்த கதையின் உண்மையான ஹீரோ இயக்குநரே. 700க்கும் மேற்பட்ட VFX காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. பல வருடப் பயணத்திற்குப் பிறகு இது எங்களின் முதல் வெளியீட்டு படம். படத்தை பார்த்து உங்கள் உண்மையான விமர்சனத்தை எழுதுங்கள் – நீங்கள் தான் எங்களின் மிகப்பெரிய ஆதரவு.
நடிகர் அசோக் குமார் பேசியதாவது..,இங்கு வருகை தந்துள்ள பத்திரிக்கை, ஊடக மற்றும் சமூக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநர் அகஸ்டின் மற்றும் தயாரிப்பாளர் மணி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
ஜாலியாக சொன்ன ஒரு வார்த்தையை சீரியஸாக எடுத்துக் கொண்டு எனக்கு முக்கியமான ரோல் கொடுத்தது என் அதிர்ஷ்டம். இது என் முதல் முழுநீள திரைப்படம் என்பதால் மிகவும் சிறப்பு.அஜித் ப்ரோ மிகவும் இயல்பாக நடித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அமர் ப்ரோவுடன் 15 ஆண்டுகளாக குறும்பட பயணம் செய்து, இப்போது இந்த படத்தில் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி. இஷிதா முழு அர்ப்பணிப்புடன் தமிழ் வசனங்களை தயார் செய்து நடித்தார். DOP அமல் ப்ரோ கடின உழைப்பால் ஒவ்வொரு ஷாட்டையும் சிறப்பாக்கினார். CGI மற்றும் தொழில்நுட்ப ரீதியாக படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஹாலிவுட் ஸ்டைல் இருந்தாலும், நம் மண்ணின் மணமும் கலாச்சாரமும் கலந்த கதை இது. என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கவும். நன்றி.
மிக்க நன்றி.
படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கவும். நன்றி.
எங்கள் கனவுகளை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி.
அஜித், அஷோக் சொன்னது போல இந்த படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு அவசியம். படம் வெற்றி பெற்றால் நாமெல்லாரும் வெற்றி பெறுவோம். இங்கே வந்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. என்னைப் பற்றிச் சொன்னால், முன்பு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். சமீபத்தில் ‘ஸ்டீபன்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தேன். இந்த படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்த அகஸ்டின் ப்ரோவுக்கு நன்றி. இந்த படம் எனக்கு மிகவும் சிறப்பானது. என் நெருங்கிய நண்பர்கள் அஷோக், நிர்மல், அஜித் இதில் நடித்துள்ளனர்.
அஷோக் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். நிர்மல் ஒரு மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன். அகஸ்டின் ப்ரோவுடன் எனக்கு எட்டு ஆண்டுகளாக பயணம். பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் அவர். என் குடும்பம் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
அனைவருக்கும் வணக்கம் , நான் இஷிதா . இந்த படத்தில் ‘நாவிஸ்’ என்ற கதாபாத்திரத்தில், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறேன். முதலில் முழு குழுவினருக்கும் நன்றி சொல்ல வேண்டும். மொழி வேறுபாடு இருந்தாலும், என்னை மிகவும் அன்பாக ஏற்றுக்கொண்டார்கள். உண்மையாகவே இங்கே வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைத்தது. இந்த கப்பலின் கேப்டன், நம்முடைய இயக்குநர் அகஸ்டின். பிரபு சார் குறித்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும். படத்தின் 80% காட்சிகளில் நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். சிறிய மேக்கப் கூட வைக்க நினைத்தால், “ப்ராசஸ்ஸை நம்புங்கள்” என்று அவர் சொல்வார். இன்று டீசரை பார்த்தபோது அது எவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று உணர்ந்தேன். மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு செய்தோம். அது சுலபமான பயணம் இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்த படத்தை நிறைய அன்பும் ஆர்வமும் கொண்டு உருவாக்கியுள்ளோம். இந்த படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். மேலும், Rock Nature Entertainment நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளருக்கும் சிறப்பு நன்றி. பலருக்கு ஆதரவு அளித்து இந்த படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர் அவர். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். நன்றி.
கடைசியாக “சதூர்” ட்ரெய்லர் வெளியிட்டபோது கிடைத்த ஆதரவுக்கு நன்றி. அதற்கு கிடைத்த வரவேற்பு முழுவதும் உங்கள் ஆதரவினால் தான் வந்தது. டிரெய்லருக்குப் பிறகு பல டிஸ்ட்ரிப்யூட்டர்கள் எங்களை தொடர்பு கொண்டார்கள். அவர்களுக்கு பிரிவியூ காட்டியபோது நல்ல ஃபீட்பேக் கிடைத்தது. சில கரெக்ஷன்ஸ் மற்றும் ஆலோசனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் சரிசெய்து படத்தின் தரத்தை மேம்படுத்தினோம். இதற்கிடையில் ஒரு சின்ன ப்ராஜெக்ட் செய்யலாம் என்று யோசித்தோம்.அப்படித்தான் “மகரம்” ஆரம்பமானது.
அங்கேயே “ராக்ஸ் சினிமாடிக் யூனிவர்ஸ்” உருவானது. இந்த யூனிவர்ஸின் முதல் ரிலீஸாக “மகரம்” வர இருக்கிறது. எங்கள் முதல் படத்திலிருந்தே இருந்த டீம் இங்கும் தொடர்கிறது. மேலும் புதிய திறமைகளும் இந்த யூனிவர்ஸில் இணைந்துள்ளனர். இனி வரும் அனைத்து ப்ராஜெக்ட்களிலும் இந்த டீம் இருக்கும். இயக்குநர் அகஸ்டின் அடுத்து ஹாலிவுட் படம் செய்யப்போகிறார். உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறோம். நன்றி.
பெரிய தயாரிப்புகள் செய்யாததை சிறிய டீமாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.
ஒரு நல்ல ஐடியா வந்தால் அதை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. அதிலிருந்தே “மகரம்” உருவானது. “சதூர்” படத்திற்கும் முன் இதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் படமாக்கினோம். கிட்டத்தட்ட 70% காட்சிகள் கடலுக்குள் எடுக்கப்பட்டது. அது மிகப்பெரிய ரிஸ்க் இருந்தாலும் தரத்தில் சலுகை செய்யவில்லை.
பெரிய டீம்களுக்கு கூட சவாலான இடங்களில் நாங்கள் பணியாற்றினோம். சின்ன பஜெட் என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வரக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தை தரவேண்டும் என்ற ஆசை இருந்தது. டீசரில் நீங்கள் பார்த்தது ஒரு சிறிய பகுதி மட்டுமே. இதற்கு பின்னால் இன்னும் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் ஆதரவு இருந்தால் இந்த சினிமாட்டிக் யூனிவர்ஸ் நிச்சயம் வெற்றி பெறும். இந்தப்படம் ஒரு ஹாலிவுட் பட அனுபவத்தை தரும். அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.
தொழில் நுட்ப குழு விபரம்









