• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மேட் இன் கொரியா – விமர்சனம்

by Tamil2daynews
March 13, 2026
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மேட் இன் கொரியா – விமர்சனம்

 

ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக மட்டும் வெளிநாடு சென்றார்கள். பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தங்கள் கனவு தேசமாக கொண்டு இளைஞர்கள் செல்ல ஆரம்பித்தார்கள்.

இன்றைய இளசுகளின் கணவர் தேசம் எது என்று கேட்டால் அதிகபட்சமானோர் கொரியாவை தான் சொல்வார்கள். கொரிய திரைப்படங்கள், கொரிய இசை உள்ளிட்டவை இன்றைய இந்திய இளைஞர்களை மட்டும் அல்லாமல் உலகெங்கும் இருக்கும் இளசுகளை கவரவே செய்கிறது.

இந்த நாடியை மிகச் சரியாகப் பிடித்து கதை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக். அந்த அனுபவத்தினோடு நம் கைபிடித்தம் அழைத்துச் செல்கிறார்.

சிறுவயதில் மாறுவேட போட்டிக்காக கூறிய ராணியின் உடை அணிந்த நாயகி பிரியங்கா மோகனுக்கு கொரியாவைப் பற்றிய சிலாகிப்பு உருவாகிவிடுகிறது. அது கொரியாவை நோக்கிச் செல்லும் கனவாகவும் மாறி விட, உடுப்பதில் தொடங்கி, குச்சிகளை கையில் பிடித்து உண்பது, வார்த்தைகளை தேடிப் பிடித்துபேசுவது என்றெல்லாம் கொரிய வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் பிரியங்கா.

அந்த முயற்சியின் உச்சகட்டமாக அவருக்கு சியோலுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க அங்கே அவர் பெரும் அனுபவங்கள்தான் கதை.

நாம் மேற்கூறியதைப் போலவே இன்றைய இளைஞர்களின் தேவை நோக்கங்களை சுற்றியதாக இருந்ததை மாற்றி கனவுகளை சுற்றியதாக இருக்கிறது.

அப்படித்தான் பிரியங்காவின் கொரிய பயணம் பற்றிய கேள்விக்கு அவர் எனக்கு பிடித்திருக்கிறது அதுதான் என்று வெளிப்படையாக பதில் சொல்கிறார். இதற்கெல்லாம் பெரிய நோக்கம் தேவையில்லை என்பதுதான் அதன் பொருள்.

மேலோட்டமாக இதுதான் கதை என்று சொன்னாலும் அதற்குள் கார்த்திக் வைத்திருக்கும் பொடி பெண்ணியத்தின் வெளிப்பாடான வெடியாக இருக்கிறது.

பெண்ணியம் என்பது எப்போதும் ஆணுடன் மல்லுக்கட்டி கொண்டே இருப்பதல்ல… தன்னை உணர்ந்து கொள்ள… தனக்கு பிடித்ததை செய்ய… தன் கனவில் வாழ்ந்து பார்க்க ஒரு பெண்ணை அவள் சுதந்திரப்படி தயார் செய்யும் முயற்சிதான் அது.

அதுவும் இன்றைய இளைய தலைமுறை பெண்களுக்கு மிகப் பொருத்தமான செய்தியாக இருக்கிறது.

தன்னை உணர்ந்து கொள்ள தனிமை பயணம் மேற்கொள்ளும் செண்பாவின் பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி பிரியங்கா மோகன் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். கனவுகளை தாங்கிய அந்த கண்கள் அவருக்கு இயல்பிலேயே அமைந்திருக்கின்றன.

கொரியாவில் கிடைக்கப்பெற்ற தாய் கிழவி பார்க் ஹைஜின் உடனான அவருடைய நேசம் அலாதியானது. தன்னைப் பற்றி பிரியங்கா கண்டு கொள்வது ஒரு புறம் இருக்க, பார்க் ஹைஜினும் தன்னை கண்டு கொள்வது நேர்த்தி.

இரு தலைமுறை பெண்களும் தங்களுக்குள் இருக்கும் வசந்தத்தை கண்டு கொள்கிறார்கள்.

அந்நிய தேசங்களுக்கு செல்லும்போது மொழி முக்கியத்துவம் பெறுகிறது என்றாலும் மொழியை தாண்டிய உணர்வுகள் எப்படி பயன்படுகிறது என்பதை கண்ணீரோடு நிற்கும் பிரியங்காவை கொரியா தெரு இசைக்கலைஞன் ஏ ஆர் ரகுமானின் பாடலை இசைத்து அவரை தொடர்பு படுத்திக் கொள்வதில் விளக்கி வியக்க வைக்கிறார் இயக்குனர்.

கொரிய படங்களை பார்த்து அதன் சுவையை உணர்ந்துவிட்ட நாம் அதன் தாக்கத்திலேயே இப்போது எல்லாம் படங்களை உருவாக்கி வருகிறோம். அதற்கு அடுத்த முயற்சியாக கொரியாவிலேயே சென்று ஒரு இந்திய படத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் கார்த்திக்.

ஒரு பெண்ணின் கனவுகளை கனக்கச்சிதமாக நிறைவேற்றுக்கும் திரைக்கதையை பாராட்டலாம்.

கதையின் கதாபாத்திரமாக வரும் செண்பாவின் கனவு நிறைவேற்கிறது இறுதியில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

பெண்ணியம் போற்றும் மேட் இன் கொரியா
Previous Post

கெணத்த காணோம் – விமர்சனம்

Next Post

கொலைச்சேவல் – விமர்சனம்

Next Post

கொலைச்சேவல் - விமர்சனம்

Popular News

  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.