• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!

by Tamil2daynews
December 2, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அம்மாவுடன் இணைந்து  ‘வா வாத்தியார்’  பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.

இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது.

இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ  வைரலாகி வருகிறது.

புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணையம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியும் “வாவ் சூப்பர்” என பதிவிட்டுள்ளார். மேலும் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் விஜய் ஏசுதாஸ் உட்பட  பலரும் வீடியோ பார்த்து  வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு  வருகின்றனர்.
இப்படத்தில் நடிகர் கார்த்தி எம் ஜி ஆர் ரசிகராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த வீடியோ வெளியாகி உள்ளதால்,  இப்பாடலின் ரீமிக்ஸ் வடிவம் இப்படத்தில் இடம்பெறுகிறதா ? இப்பாடலை வெளியிடுங்கள் என ரசிகர்கள் ஆவலோடு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பெரும் பொருட்செலவில்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக  தயாரித்திருக்கிறார்.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது.

 ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது

Previous Post

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!

Next Post

அங்கம்மாள் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

அங்கம்மாள் - விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’

    0 shares
    Share 0 Tweet 0
  • மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராக்கிங் ஸ்டார் ‘ யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தபாஹி ‘ மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!

March 3, 2026

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார்.

March 3, 2026

சூர்யா நடிக்கும் #சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

March 3, 2026

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

March 3, 2026

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

March 3, 2026

இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

March 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.