ஜெய் விஜயம் – விமர்சனம்
தமிழ் சினிமால எத்தனையோ நடிகர்கள் அப்பப்ப படங்களில் நடித்து வந்தாலும் நம்ம ஜெய் ஆகாஷ் நடிக்கும் படம் என்றாலே ஒரு தனி ரிலாக்ஸ் தான்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ்.
ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடிக்கும் பொழுது நடிகர் விஜய்க்கு போட்டியாக வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டவர் தான் ஜெய ஆகாஷ்.
எதிர்பாராத ஒரு விபத்தினால் தன் சுயநினைவை இழக்கும் நாயகனை சுற்றி அந்த மாதிரி ஒரு கதை கலர் உடன் வந்திருக்கும் படம் தான் ஜெய் விஜயம்.
ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயசதீஷன் நாகேஸ்வரன் இயக்கத்தில் ஜெய் ஆகாஷ், அக்ஷயா கண்டமுதன், ஏ.சி.பி.ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், திவாஹர், டாக்டர் சரவணன், பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெய் விஜயம்”
2022ஆம் ஆண்டில் ஆகாஷ்க்கு ஒரு கார் விபத்து நடக்கிறது. இந்த விபத்தால் 2012 க்குப் பிறகு 10 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை மறந்துவிடுகிறார். மறந்துபோன ஆண்டில் ஆகாஷ் இரட்டை கொலை செய்திருக்கிறார் என்று போலீசார் அவரை பிடிக்கிறார்கள். ஆனால் ஆகாஷ் அதை மறுக்கிறார். மறந்துபோன ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர போலீசார் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். அவர் சுயநினைவுக்கு வந்தாரா? கொலை செய்தாரா? என்பதுதான் கதை. அருமையான துப்பறியும் கதை. அதை இயக்குனர் கையாண்ட விதம் மிகவும் அருமை. கதையில் அங்கங்கே வைத்திருக்கும் அதிர்ச்சியான காட்சிகள் படம் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.
பல படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும் நடிகர் ஜெய் ஆகாஷின் நடிப்பு இந்த படத்தில் சற்று மன நிறைவே.
நாயகி அக்ஷயா கண்டமுதன் நடிப்பு அழகு. அவர் அழகுக்கு தமிழ் சினிமாவில் ஒன்று, அல்லது இரண்டு ரவுண்டுகள் வருவார்.
பின்னணி இசையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்
இவர்கள் எடுத்திருக்கும் கதை மிகவும் பழமையான வாடை வீசுகின்றதா என்று நாம் நினைக்கும் நேரத்தில் இயக்குனரின் திரைக்கதை திறமையால் பல எதிர்பாராத திருப்பங்களுடன் படத்தை முடித்து இருப்பது கைத்தட்டி பாராட்டத்தக்கது.
மொத்தத்தில் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஜெய் விஜயம்’ ரசிகர்களின் மனதில் பவனி உதயம்