ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம் “அலங்கு”

by Tamil2daynews
August 29, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம் “அலங்கு”

 

தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் அலங்கு. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும்  , தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும்  இடையே நடக்கும்  சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் , சரத் அப்பானி, அவர்களுடன் காளிவெங்கட் உடன் குணாநிதி கதை நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது .
இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார் , இவர் உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர். மேலும் சமீபத்தில் வெற்றிபெற்ற குட்நைட் திரைப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த செல்ஃபி திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது

அலங்கு – என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் , ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் கால போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி  இருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க வனம் , வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு , கேரள மாநிலம் இடுக்கி ,அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம்  ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர் படக்குழு .

முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து இப்படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்தது .

CAST & CREW
நடிகர்கள்:
குணாநிதி, செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர்.

படக் குழுவினர் ;
எழுத்து & இயக்கம் : SP. சக்திவேல்
ஒளிப்பதிவு : S.பாண்டிகுமார்
இசை : அஜீஷ்
கலை இயக்குனர் :  P.A. ஆனந்த்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
சண்டை பயிற்சி : தினேஷ் காசி
ஒலி வடிவம் : S.அழகியகூத்தன், சுரேன்.G
ஒலி கலவை : சுரேன்.G
நடனம் : அசார், தாஸ்தா
கூடுதல் கலை இயக்குனர் :  தினேஷ் மோகன்
ஒப்பனை : ஷேக் பாஷா
விலங்கு பயிற்சி : செந்து மோகன்
ஆடை : T.பாண்டியன்
ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா  மாக்ஸ்வெல் J
பாடல் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன்
கிராபிக்ஸ் : அஜக்ஸ் மீடியா டெக்
கலரிஸ்ட்  : ரங்கா
வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ
தயாரிப்பு நிர்வாகி : S.முருகன்
தயாரிப்பு மேற்பார்வை : அருண் விச்சு
தயாரிப்பு மேலாளர்  : RK.சேது
உதவி தயாரிப்பு மேலாளர் : சேட்டு போல்ட்
மக்கள் தொடர்பு : R.குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : தண்டோரா
விளம்பர ஸ்டில்ஸ் : R.மனோ, கமலேஷ் சத்தியன்
இயக்குனர் குழுவினர் : வீரா விஜயரங்கம், அருண் சிவசுப்ரமணியம், விஜய் சீனிவாசன், லியோ லோகன், அபிலாஷ் செல்வமணி, செபின் S, தேவதாஸ் ஜானகிராமன்
நிர்வாக தயாரிப்பு : D.சங்கர்பாலாஜி
தயாரிப்பாளர் : D.சபரீஷ், S.A. சங்கமித்ரா
தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS

Previous Post

பார்ட்டி மூடுக்கு இழுத்துச் செல்லும் கிங்கான் ஷாருக்கான் !, ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியானது

Next Post

ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா

Next Post

ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா

Popular News

  • சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்’ என்கிறார் நாஞ்சில் சம்பத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0

Recent News

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

September 21, 2023

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

September 21, 2023

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

September 21, 2023

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’

September 21, 2023

மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்

September 21, 2023

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

September 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!