
பிரபுதேவா இயக்கி விஷால் நடித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வெடி படத்தின் கதையும் வீரமே வாகை சூடும் விஷால் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைகள் தான் கதாபாத்திரங்கள் அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் உயிருள்ளவை உயிரற்றவை ஒரே மாதிரியான கதை திரைக்கதை அமைத்து சித்தரித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.

.கான்ஸ்டபிள் மாரிமுத்துவின் மகன் விஷால் போலீஸ் வேலை கனவுடன் முயற்சி செய்து வருகிறார். விஷாலின் தங்கை ரவீணாவிற்க்கு அந்த ஏரியா ரவுயின் தம்பி ஒருதலை காதல் தொந்தரவு கொடுக்கின்றார்.அதேபோல் வில்லன் பாபுராஜ் நடத்தி வரும் தொழிற்சாலையை எதிர்த்து ‘பரிசுத்தம்’ என்பவர் போரட்டம் புரட்சி என செய்து வருகிறார் இந்நிலையில் ரவீணா ரவி கொலை செய்யப்படுகிறார். தன் தங்கை ரவீணா கொலையை சந்தேகப்படும் விஷால் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? எதற்காக தனது தங்கை கொலை செய்யப்பட்டார்..? என்பதை விஷால் கண்டுபிடித்தாரா..? இல்லையா..? காவல் துறையில் விஷலுக்கு ‘எஸ்.ஐ’ போஸ்டிங் கிடைத்ததா..? இல்லையா..? என்பதே படத்தின் மீதி கதை.

நடிகர்கள்:-
விஷால்
டிம்பிள் ஹயாதி
பாபு ராஜ்
யோகி பாபு
துளசி,
ரவீனா ரவி,
ஆர்என்ஆர் மனோகர்,
மாரிமுத்து,
கவிதா பாரதி
இசை:- யுவன் சங்கர் ராஜா
இயக்கம்:- து.பா. சரவணன்