மார்கன் என்ற பெரிய வெற்றிக்குப் பிறகு அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, ஹீரோவாக நடித்துள்ள சக்தித் திருமகன்.
நடிகர் விஜய் ஆண்டனி, வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். அவரது லேட்டஸ்ட் படம் சக்தித் திருமகன். விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பில் தயாரித்துளளார்.
அருண் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் வாகை சந்திரசேகர், கண்ணன், ரியா ஜிது, ஷோபா விஸ்வநாத், பிரசாந்த் பார்த்தீபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேமண்ட் டெர்ரிக் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி தான் இசையமைத்து உள்ளார்.
“அண்மை காலங்களில் வந்த பொலிட்டிக்கல் த்ரில்லர் படங்களில் மிக சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் திரைப்படம் . ஒரு நொடி கூட சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாக செல்கிற முதல் பாதி. இரண்டாம் பாதியில் ஒரு சில லாஜிக் ஓட்டைகளை தவிர்த்து தரமான திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் அருன்பிரபு. அரசியல் களத்தில் நிலவும் அதிகாரப் போட்டி , ஊழல் , போன்ற விஷயங்களை மிக சுவாரஸ்யமான முறையில் காட்சிபடுத்தியிருக்கிறார்கள். இதில் பல கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் சமகால பிரச்சனைகளை நினைவுபடுத்துகின்றன. விஜய் ஆண்டியின் 25 ஆவது படமாக சக்தி திருமகன் ஒரு நல்ல தேர்வு” என விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நாயகன் கதாபாத்திரம் விஜய் ஆண்டனிக்காகவே எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரமாக அமைந்துள்ளது. அதில் அவர் மிக சிறப்பாக நடித்து உள்ளார். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
