காக்கா முட்டை ஆண்டவன் கட்டளை மற்றும் குற்றமே தண்டனை உள்ளிட்ட தொடர் வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் மணிகண்டன்.
இவரது படங்கள் ஒரு சமூக அக்கறையோடு பயணிப்பதால் இவரது படங்களுக்கு பெண்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இவர் இயக்கியுள்ள அடுத்த படம் கடைசி விவசாயி.
ஆண்டவன் கட்டளை படத்தை தொடர்ந்து இதன் மூலம் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் மணிகண்டன்.
முன்னணி கதாபாத்திரத்தை நல்லாண்டி எனும் முதியவர் ஏற்று நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்பட தொடக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்த நிலையில் சில காரணங்களால் அவர் விலக சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மாலை சற்றுமுன் இப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.
இதில் விவசாயத்தை போற்றும் வகையில் காட்சிகள் உள்ளன. அதே சமயம் விவசாயி சிறைத்தண்டனை பெறும் காட்சிகளும் உள்ளன.
யானை பாகனாக நடித்துள்ளார் யோகிபாபு.
பில்கேட்ஸ் கிட்ட பேசினேன். அவர் இங்கிலீஷ்ல பேசினார். நான் தமிழில் பேசினேன் என்கிறார் விஜய்சேதுபதி.
இறுதியாக தமிழ்நாட்டை ஆள்வது முருகன் தான் என்கின்றனர். எப்போதுமே அவர் தான் நம்மை ஆள்கிறான் என்பதுடன் டிரைலர் முடிவடைகிறது.